Page Loader
நம்முடைய ஆதார் பயோமெட்ரிக் தகவல்களை லாக் செய்வது எப்படி? அதனை ஏன் லாக் செய்ய வேண்டும்?
நம்முடைய ஆதார் பயோமெட்ரிக் தகவல்களை லாக் செய்வது எப்படி?

நம்முடைய ஆதார் பயோமெட்ரிக் தகவல்களை லாக் செய்வது எப்படி? அதனை ஏன் லாக் செய்ய வேண்டும்?

எழுதியவர் Prasanna Venkatesh
Nov 27, 2023
02:52 pm

செய்தி முன்னோட்டம்

திருடப்பட்ட நமது ஆதார் தகவல்களைக் கொண்டு தவறான, சட்டவிரோத செயல்பாடுகளில் பலரும் ஈடுபவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. ஆதாருடன் நாம் கொடுத்திருக்கும் நம்முடைய பயோமெட்ரிக் தகவல்களை யாரும் தவறாகப் பயன்படுத்தாமல் இருக்க அதனை லாக் செய்து வைப்பது அவசியம். ஆம், நம்முடைய பயோமெட்ரிக் தகவல்களை நம்மால் லாக் செய்து வைக்க முடியும். அந்த வகையில் நம்முடைய பயோமெட்ரிக் தகவல்கள் திருடுபோனாலும், அதனைப் பிறரால் பயன்படுத்த முடியாது. நாம் பயோமெட்ரிக்கை பயன்படுத்த வேண்டிய தேவை எழும்போது மட்டும், அதனை அன்லாக் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். நமது கருவிழி, கைரேகை மற்றும் முக அடையாளங்கள் ஆகியவை அடங்கிய தகவல்களே பயோமெட்ரிக் தகவல்கள் என்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதார்

ஆதார் பயோமெட்ரிக் தகவல்களை லாக் செய்யும் வழிமுறை: 

நம்முடைய மொபைலில் உள்ள ஆதார் செயலி அல்லது ஆதார் இணையதளத்தின் மூலம் நம்முடைய பயோமெட்ரிக் தகவல்களை நாம் லாக் செய்து கொள்ள முடியும். மொபைல் செயலியிலோ அல்லது ஆதார் இணையப்பக்கத்திலோ நம்முடைய மொபைல் எண் மற்றும் அதற்கு வரும் OTP ஆகியவற்றைக் கொடுத்து லாகின் செய்து கொள்ள வேண்டும். பின்னர், அத்தளங்களில் உள்ள 'மை ஆதார்' பக்கத்திற்குச் சென்றால், அங்கே நமது பயோமெட்ரிக் தகவல்களை லாக் செய்து கொள்வதற்கான தேர்வு கொடுக்கப்பட்டிருக்கும். அதனை க்ளிக் செய்து, மீண்டும் நம்முடைய ஆதார் எண் மற்றும் OTP-யைக் கொடுத்து, நம்முடைய பயோமெட்ரிக் தகவல்களை லாக் அல்லது அன்லாக் செய்து கொள்ளலாம்.

OSZAR »