Page Loader
தமிழகத்தில் தேர்தலன்று திரையரங்கு ஊழியர்களுக்கு விடுமுறை அறிவிப்பு
திரையரங்க ஊழியர்களுக்கு ஏப்ரல் 19 அன்று விடுமுறை

தமிழகத்தில் தேர்தலன்று திரையரங்கு ஊழியர்களுக்கு விடுமுறை அறிவிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Apr 10, 2024
04:05 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலன்று பொது விடுமுறை அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம். இதனை மீறுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், திரையரங்க ஊழியர்களுக்கு ஏப்ரல் 19 அன்று விடுமுறை அளிப்பதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியான அறிவிப்பில் இதனை தமிழ்நாடு திரையரங்குகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் இதனை தெரிவித்தார். எனினும் திரையரங்கள் வழக்கம்போல இயங்குமா என்பது குறித்த தெளிவான தகவலில்லை. நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சியினர் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். நேற்று தமிழகம் வந்த பிரதமர், இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். விரைவில் இந்தியா கூட்டணி சார்பாக ராகுல்காந்தியும் தமிழகம் வருவாரென எதிர்பார்க்கப்படுகிறது.

embed

Twitter Post

#Justin | மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்க ஊழியர்களுக்கும் வரும் 19ம் தேதி விடுமுறை அறிவிப்பு#SunNews | #ElectionsWithSunNews | #TamilCinema pic.twitter.com/3evcdnuiJ7— Sun News (@sunnewstamil) April 10, 2024

OSZAR »