Page Loader
அனுஷ்கா ஷெட்டி- விக்ரம் பிரபுவின் 'காட்டி' ஜூலை 11 அன்று வெளியாகிறது
அனுஷ்கா ஷெட்டி- விக்ரம் பிரபுவின் 'காட்டி' ஜூலை 11 அன்று வெளியாகிறது

அனுஷ்கா ஷெட்டி- விக்ரம் பிரபுவின் 'காட்டி' ஜூலை 11 அன்று வெளியாகிறது

எழுதியவர் Venkatalakshmi V
Jun 02, 2025
07:50 pm

செய்தி முன்னோட்டம்

தென்னிந்தியாவில் குறிப்பாக தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம்வரும் அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் உருவான, 'காட்டி' திரைப்படத்தின் வெளியீட்டு தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் முன்னதாக ஏப்ரல் 2025 இல் வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால் இப்போது ஜூலை 11, 2025 க்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், படத்தின் தாமதத்திற்கான காரணம் குறித்து தயாரிப்பாளர்கள் எந்த அதிகாரப்பூர்வ விளக்கத்தையும் அறிவிக்கவில்லை. புதிய வெளியீட்டு தேதியுடன் தயாரிப்பாளர்கள் தற்போது அனுஷ்கா ஷெட்டி மற்றும் நடிகர் விக்ரம் பிரபு இடம்பெறும் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். காதி தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியிடப்படும்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

கதாபாத்திர விவரங்கள்

'காத்தி' படத்தில் அனுஷ்கா ஷெட்டியின் கதாபாத்திரம்

'காத்தி'யின் டீஸர் முன்பு வெளியிடப்பட்டது. அதில் ஆதிவாசிகள் தோற்றத்துடன் அனுஷ்கா ஷெட்டி, அரிவாளால் ஒரு நபரின் தலையை வெட்டுவது போல் காட்டப்பட்டது. படத்தில், அவர் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் தலைவியாக நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வலுவான, அதிகாரம் பெற்ற பெண்ணின் எழுச்சியை பற்றியும், ஒரு பெரிய வர்த்தகப் பிரிவை வழிநடத்தும் கதாபாத்திரம் பற்றியும் இந்த படம் பேசும். இந்தப் படத்தை க்ரிஷ் ஜகர்லமுடி இயக்கியுள்ளார். சிந்தகிண்டி ஸ்ரீனிவாஸ் ராவ் எழுதியுள்ளார். ரம்யா கிருஷ்ணன், ஜகபதி பாபு, ஜான் விஜய், ரவீந்திர விஜய் மற்றும் VTV கணேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். வித்யா சாகர் இசையமைக்கிறார். இது UV கிரியேஷன்ஸ் மற்றும் ஃபர்ஸ்ட் பிரேம் என்டர்டெயின்மென்ட்ஸ் ஆகியவற்றின் கீழ் தயாரிக்கப்படுகிறது.

OSZAR »