Page Loader
ஏப்ரல் 2025 இல் ஜிஎஸ்டி வசூல் ₹2.37 லட்சம் கோடியை எட்டி புதிய சாதனை
ஏப்ரல் 2025இல் ஜிஎஸ்டி வசூல் ரூ.2.37 லட்சம் கோடியை எட்டி புதிய சாதனை

ஏப்ரல் 2025 இல் ஜிஎஸ்டி வசூல் ₹2.37 லட்சம் கோடியை எட்டி புதிய சாதனை

எழுதியவர் Sekar Chinnappan
May 01, 2025
06:42 pm

செய்தி முன்னோட்டம்

வியாழக்கிழமை (மே 1) வெளியிடப்பட்ட அரசாங்க தரவுகளின்படி, இந்தியாவின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ஏப்ரல் 2025 இல் இதுவரை இல்லாத அளவுக்கு ₹2.37 லட்சம் கோடியை எட்டி சாதனை படைத்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 12.6% வளர்ச்சி அடைந்துள்ளது. இது ஏப்ரல் 2024 இல் ₹2.10 லட்சம் கோடியாக இருந்த முந்தைய சாதனையை விட அதிகமாகும். மேலும் 2025-26 நிதியாண்டிற்கு ஒரு வலுவான தொடக்கத்தைக் குறிக்கிறது. உள்நாட்டு பரிவர்த்தனைகள் ₹1.9 லட்சம் கோடி அளவிற்கு பங்காளித்துள்ளன, இது 10.7% அதிகமாகும். அதே நேரத்தில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களிலிருந்து வருவாய் 20.8% அதிகரித்து ₹46,913 கோடியாக உள்ளது.

ஜிஎஸ்டி வருவாய்

நிகர ஜிஎஸ்டி வருவாய்

இறக்குமதியில் ஏற்பட்ட அதிகரிப்பு ஏற்றுமதி தொடர்பான செயல்பாடு மற்றும் கட்டண எதிர்பார்ப்பு காரணமாக ஏற்பட்டதாக வரி நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ₹27,341 கோடி ரீஃபண்ட்களை சரிசெய்த பிறகு நிகர ஜிஎஸ்டி வருவாய் 48.3% அதிகரித்து ₹2.09 லட்சம் கோடியாக இருந்தது, இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை விட 9.1% அதிகரிப்பைக் குறிக்கிறது. உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் காஷ்மீரில் சமீபத்திய அமைதியின்மை உள்ளிட்ட புவிசார் அரசியல் பதட்டங்களுக்கு மத்தியில் இந்த வளர்ச்சியை பொருளாதார மீள்தன்மையின் அடையாளமாக நிபுணர்கள் கருதுகின்றனர். இந்த புள்ளிவிவரங்கள் இந்தியாவின் பொருளாதார ஸ்திரத்தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக எர்னஸ்ட் யங் இந்தியாவின் சவுரப் அகர்வால் வலியுறுத்தினார்.

OSZAR »